நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனைக்கு முன்னர் விதிக்கப்பட்டிருந்த அனைத்து கட்டுப்பாடுகளும் ஜூலை 1 முதல் நீக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றத்தால் எரிபொருள் விநியோகத்தில் ஏற்படும் இடையூறுகளைத் தடுப்பதற்காக முன்னெச்சரிக்கையாக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தற்போது அவசியமில்லை என்று அரசு தெளிவுபடுத்தியுள்ளது. சில்லறை விற்பனை நிலையங்களில் டீசல் விற்பனை மீதான கட்டுப்பாடு முழுமையாக நீக்கப்பட்டதோடு, தொழில் துறை நுகர்வோர் வழக்கமான பெட்ரோல் நிலையங்களில் இருந்தும் மீண்டும் எரிபொருள் வாங்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் எரிபொருள் விநியோக நிலைமை சீரடைந்துள்ளதாகவும், கள்ளச்சந்தை மற்றும் பதுக்கல் பிரச்சினைகள் குறைந்துள்ளதாகவும் பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது. பொதுமக்களுக்கு இயல்பான விநியோகம் எந்தப் பிரச்சினையுமின்றி தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை மீதான கட்டுப்பாடுகளை மத்திய அரசு நீக்கியது.