கணவரை விட மனைவி அதிகமாக சம்பாதிக்கும் வழக்குகளில் ஜீவனாம்சம் வழங்க நீதிமன்றங்கள் உத்தரவிட வேண்டிய அவசியமில்லை என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. குடும்ப வன்முறைச் சட்டம் அல்லது பிற சட்டங்களின் கீழ் தாக்கல் செய்யப்படும் ஒவ்வொரு வழக்கிலும் ஜீவனாம்சம் வழங்குவது சரியான கொள்கை அல்ல என்றும் கூறப்பட்டுள்ளது. மனைவி தனது வாழ்வாதாரத்தைத் தானே நிர்வகித்துக் கொள்ளும் நிலையில், நிதிச் சுமையை கணவர் மீது சுமத்துவது நியாயமற்றது என்று நீதிமன்றம் கூறியது. மனைவிக்கு குழந்தை பராமரிப்பு போன்ற கூடுதல் பொறுப்புகள் உள்ளதா, அவரது வருமானம் எவ்வளவு, கணவரின் நிதி நிலைமை என்ன போன்ற காரணிகளை முழுமையாக ஆராய்ந்த பின்னரே ஜீவனாம்சம் குறித்த முடிவு எடுக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் பரிந்துரைத்தது.

மனைவியின் வருமானம் அதிகமாக இருந்தால் ஜீவனாம்சம் கட்டாயமில்லை: கர்நாடக உயர் நீதிமன்றம்